சுவையற்ற காகிதக் கனிகளுக்காய் இலைமறை காய் உணர்த்தல்
![](https://eluthu.com/images/loading.gif)
மிதமான காற்றினில் இதழ்விரிக்கும் பூக்களுக்கு
பதமாக இறங்கும் புதர்முட்களின் வலி ஒவ்வொருமுறையும் புதிதுதான்..?
செம்பருத்திகளுக்கோ செங்காந்தள்களுக்கோ மட்டுமே எழுதியதல்ல
வெண்பருத்தி தொடங்கி வெள்ளெருக்கு வரையிலான அனைத்து மலரினங்களுக்கும்தான்...
வெள்ளாடுகள் மேயுமென தெரிந்திருந்தும் புறவெளியில் பூச்செடிகள் வளர்ப்பது ஏன்..?
வெள்ளைக்கார கலாச்சாரம் விவகாரமானதென அறிந்திருந்தும் விலைக்கு சிலையாவதும் ஏன்...!
காற்றசைவை காரணம்காட்டி காரியம் சாதிக்கிறது புதர்முட்கள்
கலையிழந்த மலரிதழ்களோ கறைபடிந்து விதி துறக்கின்றது...
விளக்கம் கொடுத்திடுமா விலங்கினம்
வில்லங்கம் தொடுத்திடுமா தளர்ந்துபோன புல்லினம்...