நீதி கேட்கும் சிட்டுக்குருவி
ஒரு தாய்பசுக்கு
நீதி வழங்கிய
மனுநீதிச்சோழனே...!
எங்கே உன் ஆராய்ச்சி மணி...?
என் வம்சமே அழிந்துப்போகிறது
எனக்கு நீதி வழங்க
யாருமில்லை இத்தரணியில்...!
மீண்டும் பிறந்து வந்து ஆட்சிசெய்
எனக்கும் நீதி வேண்டும்...
நான் கேட்கும் நீதியெல்லாம்
என் இனம் அழியாமல்
பாதுகாக்கப்பட வேண்டும்...