மெதுமெதுவாய் கரைகிறேன்-குயிலி
மெதுமெதுவாய் கரைகிறேன் -குயிலி
இன்றைக்கெல்லாம்
நிலவு எனக்கு
பிடித்தமானதாய்
இல்லை
கோபம் தீர்க்கும்
கொஞ்சல்கள்
இல்லை
வெட்கம் தரும்
தீண்டல்கள்
இல்லை
முத்தம் தேடும்
கோபமும்
கோபம் தரும்
முத்தமும்
இல்லவே இல்லை
உனை நீங்கிவாழா
இந்நாட்களில்லெல்லாம்
என் கண்ணீரில்
மெதுமெதுவாய்
கரைகிறேன் ..!