சன்யா - வெள்யா

ஏண்டி பக்கத்தூட்டு ஒறவுக்காரப் பொண்ணு உங்க பாப்பா பேரு என்னடி?
😊😊😊😊😊
பாட்டிம்மா, எங்க பாப்பா பேரு சன்யா.
😊😊😊😊
என்னது சன்னியாவா? அந்தப் பேருக்கு என்னடி அர்த்தம்?
😊😊😊😊😊
'சன்யா' -ன்னா 'சனிக்கிழமை பிறந்த(வ{ள்})ன்னு அர்த்தம் பாட்டிம்மா.
😊😊😊😊
அட இது எங்களுக்குத் தெரியாம போச்சே!
😊😊😊😊😊
ஏம் பாட்டிம்மா, எதுக்கு தெரியாம போச்சே-ன்னு சொல்லறீங்க?
😊😊😊😊😊
இல்ல, இந்த மாதிரி கொழந்தை பொறந்த நாளக் குறிப்பிட்டு பேரு வைக்கற சேதி எங்களுக்கு தெரீலயே?
😊😊😊😊😊
தெரிஞ்சிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க பாட்டிம்மா?
😊😊😊😊
எங் கொள்ளுப் பேத்தி வெள்ளிக்கிழமை பொறந்தாடீ. அவளுக்கு வெண்ணிலா -ன்னு பேரு.
உம் பொண்ணு பேர நாங்க முன்னாடியே கேள்விப்படிருந்தா
அவுளுக்கு 'வெள்ளியா' (வெள்யா)-ன்னு பேரு வச்சிருப்போம்.
😊😊😊😊
அதுக்கென்னங்க பாட்டிம்மா. இப்பக்கூட உங்க பேத்தி பேர மாத்திக்கலாம். உங்க பேரனையும் அவரு மனைவியையும் ஒரு வழக்குரைஞைரப் பாக்கச் சொல்லுங்க. அவரு உங்க பேத்தி பேர சட்டப்பூர்வமா மாத்த வேண்டிய ஏற்பாட்டைச் செய்வாரு.
😊😊😊😊
ரொம்ப நன்றீடி பொண்ணு.

@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@
திரைத் தமிழைத் தவிர்ப்போம்.
கற்றோர்க்குரிய நற்றமிழைப் பயன்படுத்துவோம். நம் செம்மொழி. உலகின் முதன் மொழி.
@@@@@@@@@@@@@@@@@@@@@
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிரிக்க அல்ல. சிந்திக்க.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Sanya = born on Saturday

எழுதியவர் : மலர் (16-Jun-17, 7:57 pm)
பார்வை : 162

சிறந்த நகைச்சுவைகள்

மேலே