சிறகு முளைத்த கோலம்

இறைவன்
தானே
முன் வந்து
இட்ட வண்ணக்கோலம்
தான் என்ற
பெருமிதம் தந்த
மகிழ்வோ!?

தரையில்
கால் பதியாது,
ஓரிடத்தில்
நிலை கொள்ளாது,

பறந்து பறந்து
திரிகிறது
வண்ணத்துப்பூச்சி!

எழுதியவர் : (16-Jun-17, 9:51 pm)
சேர்த்தது : usharanikannabiran
பார்வை : 89

மேலே