கிராமத்து காதல்

வாசல் பெருக்கி தண்ணிர்
தெளித்து நீயும் நிமிரயிலே.....

என் சைக்கிள் பயணம்
உன்னை கடக்கும் வேளை அது
கண் பார்த்து கொண்டோம்.....

இப்படி தான் காதல் தொடங்குமென்று
நானும் நினைக்கவில்லை....

நிலத்தடி நீர் உறுஞ்சும்
கருவேலம் செடி போல ஆழ பதிந்து
நினைவுகளில் ஆழ் கொண்டாய்....

பெண்களை கானும் போது ஏற்படும்
ஈர்ப்பென்றேன் எண்ணினேன் உன் விழியின் சந்திப்பை....

உன் காந்த கண்ணின் கருவிழியில்
கரைந்து போவேன் என்று நினைக்கவில்லையே......

நீ பேசிய கண் ஜாடை அதை எப்பெண்ணிடமும் கண்டதில்லையே
உன் சிரிப்பெனும் சிலந்தி வலையில்
சிக்குண்டு போனதேனோ......

காதல் வயப்பட்டால் காலார நடப்பதாய்
உணர்வில்லை எதிர்படும் விரோதியிடம்
கூட குசலம் விசாரிக்க தோன்றும் வினோதமடி பெண்ணே........

வாழ்ந்தால் உன்னோடு என்று
வாள் ஏந்தி நிற்கிறேன்....

புழுதி மணல் பறக்க போர் புரிவதற்கு அல்ல
பூ அலங்கரித்த மணமேடையிலே
வாழை இலையின் தோரணமிடுவதற்கு......
🌴🌴🌴🌴Samsu🌴🌴🌴🌴

எழுதியவர் : Samsu (18-Jun-17, 12:56 am)
சேர்த்தது : சம்சுதீன்
Tanglish : kiramaththu kaadhal
பார்வை : 1928

சிறந்த கவிதைகள்

மேலே