கல்விக்கட்டணம்-2

வகுப்பில் நுழைந்தவனுக்கு பாடங்களில் கவனம் செல்லவில்லை...
இரண்டு வாரங்களில் மீதி பணத்தை எவ்வாறு ஏற்பாடு செய்வதென்று மிக கவலையால் பீடிக்கப்பட்டவனாய் புன்னகை மறந்தான்...
பொழுதுபோக்கும் மறந்தான்...
கண்ணீர் வடிந்துக் கொண்டே இருக்கும் அந்தக் கண்களில் கடல்நீர் தான் நிறைந்திருந்ததோ?
ஒரே உப்புக்கரிப்பு...

அன்றாடச் செலவிற்குக் கிடைப்பது இருபது ரூபாய்...
பல நேரங்களில் அதுவும் கிடைப்பதில்லை...
பணமிருந்தால் மதியம் இரண்டு வடைகளை வாங்கிக் கொண்டு, அதைக் கொண்டு தான் கொண்டுவந்த சுவையற்ற உணவையும் சுவைத்து உண்பது அவன் வழக்கம்...
பணமில்லா நேரங்களில் பெரும்பாலும் தான் கொண்டு வந்த உணவை எப்படியும் விழுங்கிவிட முயற்சிப்பான்...
சில நேரங்களில் அவன் நண்பர்களிருவரிடம் அவன் உதவி கேட்பான்...
அவன் கேட்கும் போதெல்லாம் அவர்களிடம் பணமிருந்தால் இல்லையென்று மொழியாது வழங்குவார்கள்...
தன்னிடம் பணம் வரும் போது அதை திருப்பித்தந்தால் அவன் நண்பர்கள் வாங்குவதில்லை...
அதைக் காரணமாகக் கொண்டே பெரும்பாலும் அவன் நண்பர்களிடம் உதவி கேட்க அவனுக்கு கூச்சம்...
அதனால் அவனோடு அந்த இரண்டு நண்பர்களே மிகவும் நெருக்கம்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (18-Jun-17, 6:21 pm)
பார்வை : 1427

மேலே