என் தந்தை

உயிர் தந்தவன் தகப்பன்
உடல் தந்தவள் தாய்.....
இரு உறவுகளும் இரு கண்கள்
அதில் சிறந்தது எது என்றால்
பதில் இல்லை என்னிடம்....
எல்லோருக்கும் இருக்கும்
எதிர்ப்பார்ப்பு என் தந்தைக்கும்
முதல் குழந்தையின் பிறப்பு....
இரண்டு வருடத்திற்கு பிறகு
பிறந்தேனாம்
பத்து திங்கள் சுமந்தவள் தாய்
பதினாறு வருடங்கள் சுமந்தவன் தந்தை
பண்டிகை காலங்களில்
விவரம் அறியாது அடம்பிடிக்கும்
மகனாக நான்....
என் ஆசை நிறைவேற்ற தன்னுடல்
வருத்தியவன் என் தந்தை.....
தான் உடுத்தாது நான் உடுத்த
கை காசுகளை எல்லாம் கொடுத்து
என் எண்ணம் நிறைவேற்றியவன்.....
சம்பாதிக்க தொடங்கிய காலம் அது
ஆசை மேலோங்க என்ன வேண்டுமென்று தந்தையிடம் கேட்க
அந்த ஜீவன் என்னிடம் கேட்டது
ஒரு வெள்ளை வேஷ்டியும்
வெள்ளை சட்டையும் மட்டுமே....
மனம் நிறைந்த சந்தோஷம்
முதல் வருமானத்தில் தந்தைக்கு
புது துணி வாங்கியதில்.......
ஊர் திருப்பு காலம் நெருங்க
என்னை நெருங்கிய சேதி
தந்தைக்கு உடல் நலக்குறைவு
உடன் வரவும் என்ற அழைப்பு....
ஊர் திரும்பிய ஏழாவது நாள்
என் தந்தையின் மரணம்
நடை பிணமாகி போனேன்....
கோடி உடை உடுத்தி
வீர நடை போடுவாய் என நினைத்தேனே
உன்னை கிடத்தி உன் உடல் போர்த்தவா
வெள்ளை நிறத்தில் உடை வாங்கி வர சொன்னாய் என் அருமை தந்தையே...
என் கண்களில் ஆனந்த கண்ணீர்
வருமென்று நினைத்தேனே
ஆண்டுக்கு ஒரு முறை கண்ணீர் அஞ்சலி
செலுத்த வைத்து விட்டாயே தந்தையே......
தந்தையர் தினம் அது கடந்து விட்டாலும்
உன் நினைவுகளில் என்றும் கலந்தே
இருப்பேன்......
மறு ஜென்மம் ஒன்று இருக்குமென்றால்
உன் மகனாக பிறக்கவே தவமிருப்பேன்.....
💐💐💐💐Samsu💐💐💐💐