என் முத்தழகு அவள் தான் அழகு

கன்னிமயில் அவளழகு கண்களிலே மீனழகு
கன்னக் குளியழகு காந்தர்வக் குரலழகு
பூவாசம் சொரிகின்ற புன்னகை இதழழகு
கார்கால மழைபெய்து கழனியெல்லாம் செழிப்பதுபோல்
எழில்கால முகில்வந்து இவளுடம்பில் பொழிந்ததனால்
மின்னும் பொன்போன்று மேனியெல்லாம் ஜொலிக்கின்றாள்
எந்தன் மனங்கவர்ந்த ஏந்திழையாள் முத்தழகு
ஆக்கம்
அஷ்ரப் அலி