மைல் கற்கள்
பள்ளிப் படிப்பு- என்
நாடித்துடிப்பில் மறையாத,
மலரும் நினைப்பு.
துள்ளிக் குதித்து-நான்
துடித்து இருக்கையில், ஆசிரியர்,
அள்ளித்தந்த அறிவுரைகள் .
என்
வாழ்க்கை பயணததின்
மைல் கற்களாய்
ஆங்காங்கே நின்று
அறிவுறுத்துகிறது ,
வாழ்கை வனப்பை!