உணவுக்கும் உண்டு உணர்வுகள்

உண்ணும் உணவுக்கும்
உணர்வுகள் உண்டு.
பசிக்கு மட்டுமல்ல;
ருசிக்கும் உணவு அவசியம்.
கடுமையான பணிகளையும்
களைப்பின்றி செயது முடிக்க
உண்ணுகின்ற உணவு
தரமானதாக இருக்க வேண்டும்.
காலை உணவு களைப்பைப் போக்கும்.
மந்தம் இல்லாமல் இருக்க
மதிய உணவு அவசியம் தேவை.
ஆக உணவுதான் நமக்கு மருந்து.
மருந்துதான் நமது உணவு.
சாதமும் பருப்பு சாம்பாரும்
நெய்யுடன் கலந்து உண்டால்
சுவையோ சுவை!!!
கறியும் கூட்டும்
தொட்டுக்கொள்ள ருசிக்கும்.
நார் சத்துக்கு கீரை போதும்.
மோரும் சாதமும்
மோட்சத்தை அருகே கொண்டு வரும்.
ஊறுகாயும் அப்பளமும்
சுவைக்கு சுவை சேர்க்கும்,.
நலமாய் வாழ நல்லதை உண்போம்
வளமாய் வாழ வெந்ததை உண்போம்.

எழுதியவர் : ராஜு (20-Jun-17, 12:02 pm)
சேர்த்தது : C.B.Raju
பார்வை : 5467

மேலே