பாதை மாறிய தருணங்கள்

மறந்து போன
வாழ்க்கை....
வாழ்க்கை தடத்தில்
பாதை மாறிய
தருணங்கள் ..
எனக்கு நானே
போட்டுக்கொண்ட வேளியில் நானே
சிக்கிக்கொண்டேன்
பறவையாய்...
முள்ளாய் தைக்கிறது
நினைவுகள்....
யாரோ அழைப்பது
காதில் கேட்டாலும்
மனம் மரத்துத் திரும்பமறுக்கிறது..
மனத்தில் சில காயங்கள் ஆறாமல்
இன்னும் இருக்கிறது...
உதடுகள் சிரித்தலும்
மனமின்னும் ஒப்பாரி கீதம் பாடுகிறது...
மறக்கத்தான் நினைக்கிறேன்..
தினமும்
மறப்பதாய் உன்னையே
நினைக்கிறேன்...
எங்கு சென்றும்
வீடுத்திரும்ப நினைக்கும் மனம்...
வீடு தாண்டியும்
நடை நிறுத்தவில்லை
கால்கள்....
இன்னும்
தொலைக்க
ஏதுமில்லை...
என்றோ ஒரு
நாள் உன்னை
நினைக்க மறந்திருந்தால்
அன்று நான்
இறந்திருப்பேன்...

எழுதியவர் : கருப்பசாமி (20-Jun-17, 5:28 pm)
சேர்த்தது : கருப்பசாமி
பார்வை : 102

மேலே