மலரின் தேகம் எனக்கே
மலர்கள் வைக்கும் கூடையாக அவள்
கூந்தல் ஏனோ!
மலர் மீது மலர்கள் வைக்கப்பட்டதால்
மலருக்கும் வாசம் வந்ததோ?
ஒரு நாள் வாசம் இழந்து சுவாசம் நிருத்திக்கொண்ட மலராய் மண்ணில் மடிய ஆசையில்லை!
அவளுக்கு மலர்களைத் தரும் செடியின்
காலடியில் மண்ணாக நானாக
அப்போது தான்!
அவளையும் சுமப்பேன் அவளால் மரணம்
அடைந்த அந்த மலரையும் சுமப்பேன்.....
ரா ஸ்ரீராம் ரவிக்குமார்