என்ன விலை அழகே -- தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை
என்ன விலை அழகே -- தரவு கொச்சகக் கலிப்பா - மரபு கவிதை
அழகான பூஞ்சிலையே அருகினிலே வாராயோ?
வழக்கமான சொல்விடுத்து வண்ணமிகு காதலினால்
பழகிடவும் ஆசைகொண்டு பரவசமாய் அழைக்கின்றேன் .
அழகுடைய சிற்பமேநீ அன்புதனைத் தாராயோ?
செந்தமிழின் வாசத்தால் சேர்ந்திடவே விரும்புகின்றேன் .
பந்தமுடன் பூஞ்சிலையே பக்குவமாய் நெருங்கிடுவாய் .
தந்திடுவேன் நெஞ்சத்தை தரமான உன்னிடமே .
எந்நாளும் நீயன்றோ என்னுயிரும் உனதன்றோ !!!
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்