தந்தையெனும் அகராதி
தந்தையெனும் அகராதி
இறைவன் ஒருநாள் மாறுதல் தேடி மண்ணில் வந்தார் .
கண்டார் என்னை . விண்ணை நோக்க என் தந்தை தெரிய
விழிகள் விரிய பார்த்தேன் . அன்பென்ற கடலில் நீந்தி வந்தவரோ !
அறுபதாம் அகவையில் தொலைத்தேன் தந்தையை !
எட்டு முழத்தில் வேட்டி ! வெள்ளை சட்டை மனமெல்லாம் வெள்ளை .
விடியலுக்கு வித்து . வித்தகனாய் பேச்சு செவிகளில் விழவே செய்கிறது .
சம்சாரக் கடலில் மூழ்கி சாதித்த அகராதி ! இலக்கணம் வரையறுக்க
முடியாத இலக்கியம் ! வீடாளும் வித்தகன் ! தலை தாழாத் தலைவன் !
அழியாத கல்விச் செல்வத்தை ஈந்து ஆளுமையைக் காட்டிய அகராதி !
தேடினாலும் கிடைக்காத தேவன் ! கண்ணீரால் மை நிரப்பிய எழுதுகோல்
எழுத்துகள் சிதறினாலும் மீண்டும் தந்தை என்றே சொற்பதத்துடன் நிற்க
சிந்துகின்றேன் கண்ணீரை தந்தையை எண்ணியே !!!
ஆக்கம் :- கவிச்சிற்பி . சரஸ்வதி பாஸ்கரன்