வாழ்க்கை

காதல் தேடி அலைந்தபோது
காதல் கிடைக்கவில்லை
காதல் கிடைத்தபோது காதலில்
நாட்டமில்லை
வேலைத்தேடி அலைந்தபோது
நல்ல வேலை ஏதும் கிடைக்கவில்லை
நல்லவேலை கிடைத்தபோது காலம்
கடந்து போனது உடம்பில் திராணி இல்லை
இப்படி உலகியல் பொருட்கள் கிடைக்கவில்லையே
என்று துறவு நாடினால் துறவுக்கு
இன்னும் நேரம் கூடவில்லை
இறைவா இப்படி ஏதும் கிடைக்கவில்லையே
இந்த வாழ்க்கை எதற்கு என்று நினைத்தபோது
என்னுள் ஒரு சலனம் வந்தது -இப்போது எதிலும்
நாட்டம் இல்லை அந்த இறைவன் பாதம் தவிர
பொய்யாமை கிடைத்தபின் நாடுவது
இனி யாதும் இல்லை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Jun-17, 2:20 pm)
Tanglish : vaazhkkai
பார்வை : 157

மேலே