மழைக்காலம்

பருவத்தின் முதல் மழை
பருவதத்தின் நீர் கொடை
கருவுற்ற மேகத்தின் முதல் பிரசவம்
கவலையுற்ற மக்களுக்கோ சுகப்பிரசவம்
நீர் அவள் நிலம் சேர
நில மகளோ உயித்தெழுந்தாள்
உறங்கி கிடந்த நதியெல்லாம்
இனி ஓடோடி வந்திடுமே
வாய்க்கால் வரப்பெல்லாம்
இனி வண்ணமயம் ஆகிடுமே
வரண்ட எம் நிலமெல்லாம்
இனி வளமாய் மாறிடுமே
கொக்குக்கும் நாரைக்கும்
இனி கொத்த புழு கிடைத்திடுமே
வாழ்வற்ற எம் விவசாயி
வாழ்க்க இனி உயர்ந்திடுமே
தலைநகரில் கையேந்திய என்னவனோ
இனி தலைநிமிர்ந்து செல்லும் மன்னவனே.

எழுதியவர் : கோ. கலியபெருமாள் (22-Jun-17, 9:29 pm)
சேர்த்தது : கலியபெருமாள்
Tanglish : malaikkaalam
பார்வை : 338

மேலே