காதல் கூத்துற்று
![](https://eluthu.com/images/loading.gif)
காதல் கூ(த்து)ற்று
சிறு நொடிப்பொழுதில்,
இருவிழிக்கொண்டு,
மறுவிழி மயக்குகிறாள்!
மயங்கிய நொடிப்பொழுதில்,
இதயத்தின் மாறுதலால்,
அனுதினமும் ஏங்குகிறான்!
அனுதின தரிசனத்தால்,
இரு வழிப்பாதையை,
ஓர் வழிப்பாதையாய் மாற்றுகிறாள்!
ஓர் வழிச்சாலையில்,
இரு கைகள் கோர்த்து,
கனவுகளோடு பயனம் ஆரம்பம்!
சிறுதூரப் பயணத்தில்,
முரண்கொண்டு கனவுகள் கலைய,
வீதியுலா வந்தது காதல்!!!
உங்கள்
தௌபிஃக்