உன்னில் தொலைந்த நான் உருகுகிறேனடி 555

உயிரே...

உன்னை நான் எப்படியும் சந்திக்கலாம்
என்று நினைக்கும் நாட்களிலெல்லாம்...

எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது
பெய்யும் மழை...

சாலையோரமாக உன்னை
தேடும் நேரம் தெரிந்தவரின் பேச்சுக்குரல்...

என்றைக்குமே இல்லாமல் அன்று மட்டும்
உன் முகம் மறைக்கும் குடை...

என்றும் இல்லாமல் அன்று
நீ உடுத்தி இருந்த உடை...

உன் முகம்
மறைத்து நீ நிற்க...

உன்னருகில் நான் சிறிது
நேரம் காத்திருந்தேன்...

யாரோ என்று நினைத்து
நான் தூரம் செல்லும் போது...

ஏனடி அப்படி பார்த்தாய்
மெல்ல குடை உயர்த்தி என்னை...

என்னை தவிக்க விடுவதில்
உனக்கு அவ்வளவு ஆனந்தமா...

நான் என்றோ
தொலைந்துவிட்டேன் உன்னில்...

உன்னில் தொலைந்த
என்னை...

நீ
தொலைத்துவிடாதே கண்ணே.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (24-Jun-17, 7:09 pm)
பார்வை : 717

மேலே