உண்மையில் நீ யார் எனக்கு

உண்மையில் நீ யார் எனக்கு?

என்னுடன் அடிக்கடி குடுமி பிடிக்கிறாய்
(உடன் பிறப்பா?)
எப்போதும் கடுகடுப்புடன் கண்டிக்கிறாய்
( தந்தையா?)
நான் நோயுற்றால் உன் உறக்கம் தொலைக்கிறாய்

உண்ணாமல் இருந்தால் திட்டி தீர்க்கிறாய்

கடிந்து கொண்டே தலைவாரி விடுகிறாய்

என் முகவாட்டம் காணமுடியாமல் பொருமுகிறாய்
(அன்னையா?)

எல்லையற்று கேலி செய்கிறாய்

என்னை யாரேனும் வைதால் எனக்கு முன்பு வரிந்து கட்டுகிறாய்

என் இயல்போடு ஒருநாளும் நீ ஒட்டியதில்லை..

இருந்தும் உன்னைப் பிரிய மனமில்லை...

நீ என்னுடன் பேசாமல் இருக்கும் நாட்களிலெல்லாம் நான் ஏன் தனிமையை உணர வேண்டும்?

இறுதியாய் உணர்ந்தேன்....
நீ என் இதய தோழமை என..

எழுதியவர் : சாஜிதா (25-Jun-17, 2:39 pm)
பார்வை : 513

மேலே