நட்பால்
அன்'பால்' சேர்ந்த நட்'பால்'
என்றும் விலகும் கவலை
பண்பான அவர் உறவால்
மனமும் ஆகும் பறவை
கண்ணீர் எட்டிப் பார்க்க
நண்பன் விடவே மாட்டான்
செந்நீர் சொந்தம் அவனே
கண்ணின் மணியாய் காப்பான்
புயலும் வாழ்வில் அடித்தால்
இதமாய் இதயம் தொடுவான்
வயலாய் கிடந்து தவித்தால்
இனிய மழையாய் பொழிவான்
நட்பை நம்ப சுககே
நட்பை ஏற்க நலமே
நட்பே தெளிவு கொடுக்கும்
நட்பே அமைதி அளிக்கும்