உன்னைச் சரணடைந்தேன்...!

உன்னிடம்
கண்டதென்ன
என்றறியேன்...
நீ எனக்கானவன்
என்பதை எப்படி
மறுப்பேன்..?

பூச்சாரலானாலும்,
போராட்டமானாலும்
நீயிருந்தால்
வாழ்க்கை
தேரோட்டமாகலாம்..!

மாயை
என்றறிந்தும்
காதலிக்க
நீயெனக்குத்
தேவை..!

நானுன்
காமத்தை தூண்டவில்லை...
கவர்ச்சித் தூண்டிலிடவில்லை...
காதல் தேடலாயிருக்கிறேன்..!

ஏழேழு
யுகமானாலும்
காத்திருப்பேன்.
நீயெனை
நிராகரிக்காதிருந்தால்..!

கண்டதும்
போராளியெனை
காதல்
நோயாளியாக்கி விட்டாய்..!

அருகில் வா...
ஊரேயறிந்தும்,
நீயறியாததைச்
சொல்கிறேன்...
நானுன்னிடம்
சரணடைந்து விட்டேன்..!

எழுதியவர் : (19-Jul-11, 1:17 pm)
பார்வை : 410

மேலே