என் அந்திகாவலன்

என் கோபக்கனலை அணைக்கும் குளிர்தன்மையன் அவன்..
என் தனிமை போக்க நிலவாக என்னுடனே பயணித்தவன் அவன்..
எனை அழகாக்க தன்னொளியில் என்
மேனியில் நட்சத்திரங்களை பதித்தவன்..
இரவெல்லாம் எனக்காக விழித்திருப்பவன்
என்னறையில் ஊடுருவல் புரிந்த வெண்கதிரோன்..
என் அந்திகாவலன்..
- வைஷ்ணவ தேவி