உண்மை
ஒரு நாணயம் கீழே கிடக்கிறது ... உங்களுக்கு முன் செல்பவர் அதை தெரியாமல் தவற விட்டுவிட்டார்
என்ன செய்வீர்கள் ...
அபகரிக்க எண்ணுவீர்களா ..?
நினைவில் கொள்ளுங்கள் அது உங்கள் பணம் அல்ல ...
அந்த பணத்தை சம்பாதிக்க அவர்கள் எவ்வளவு கடினப்பட்டிருப்பார்கள் ...
ரத்தமும் சதையுமாய் உழைத்திருப்பார்கள் ...
நீங்கள் அவ்விடத்தில் இருந்தால் ...
ஆம் , அதே தான் ...
அந்நாணயத்தை அபகரிப்பது நாணயமில்லையே ..
வேண்டாமே ...
*****
வயது என்பது வெறும் எண் தான் ...
மனிதன் என்பது எண்ணம்...
உதாரணம் வேண்டுமோ ...
எப்படி சொல்வது , ம்ம் ...
நீங்கள் பெரியவர் என்பதை உங்களின் நடத்தை தான் சொல்கிறது ...
நீங்கள் பெரியவர்களை மட்டுமல்ல சிறியவர்களையும் மதியுங்கள் ...
அண்ணா , அக்கா , தம்பி , தங்கை இப்படி அழையுங்கள் ...
எல்லோருக்கும் உண்மையாக இருங்கள் ...
பொய் கூறாதீர்கள் ஆயிரம் நன்மை கிடைத்தாலும் ...
தாய் தந்தைக்கு உண்மையாக இருங்கள் ...
அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விடாதீர்கள் ...
தாய் மொழியை அழித்துவிடாதீர்கள் ...
தாயை உயிரோடு புதைத்துவிட்டு
வாழ இயலுமா ...?????
பெண்களே ...
மாமியாரை உங்களின் தாயாக பாருங்கள் ...
பிறந்த வீட்டு , புகுந்த வீட்டு பெருமையை காப்பாற்றுங்கள் ...
குடிப் பெருமையை காப்பாற்றுங்கள் ...
குல பெருமைகளை காப்பாற்றுங்கள் ...
மனிதர்களே ...
நீங்கள் நினைப்பது மாத்திரமே வாழ்க்கை இல்லை ...
இயற்கை , இசை , உண்மை இப்படி வாழ்க்கை மிகப் பெரியது அழகானது ...
உண்மையாக இருந்தால் கிடைக்கும் மன நிம்மதி எப்படி இருக்கும் தெரியுமா ...
தாய் மடியில் துயிலுவது போல் பரிசுத்தமானது .....
ஆதலால்
தாய் மொழிக்கும் ...
தாய் தந்தைக்கும் , உடன்பிறந்தவர்களுக்கும் , கணவன் மனைவிக்கும் , தாத்தா பாட்டிக்கும் , குழந்தைகளுக்கும் ........
இயற்கைக்கும் ...
நட்பிற்கும் .....
உறவுகளுக்கும் ...
சமூகத்திற்கும் ...
சிறு புல்லுக்கும் உண்மையாக இருங்கள் ...
ஒரு வார்த்தையில்
உண்மை உயர்வானது ...