விழிகளை மூட சொல்லியும் அவை தூங்குவதில்லை
![](https://eluthu.com/images/loading.gif)
விளக்குகளை அணைத்தபின் விளக்கமுடியா உணர்வுகள்
என்னை ஆட்கொள்வதை தடுக்கமுடியா தவிப்புகள்
தூர தெரியும் நட்சத்திரத்தை போல நீ எங்கோ தூரமாய் இருக்கிறாய்
என் தவிப்பை பார்த்தபின் என்ஜன்னலருகில் வந்து நிற்கிறாய்
அருகில் வர சொல்லி தான் நீ கண்ணை சிமிட்டுகிறாய்
புன்னகைத்து நான் வர நீயோ கண்ணாமுச்சி ஆடுகிறாய்
நட்சத்திர கூட்டத்தில் நீ எங்கோ ஒளிந்து கொள்கிறாய்
நடுவானில் வர வழியற்று நிற்கும் என்னை பழித்து செல்கிறாய்
திரைசீலைகள் மூடுவதில்லை உன்னை தேடுவதற்காகவே என் ஜன்னல்கள்
வேறெங்கும் ஓடுவதில்லை உன்னைவிட்டு என் நினைவு பின்னல்கள்
விழிகளை மூட சொல்லியும் அவை தூங்குவதில்லை
விவரம் சொல்லியும் என் மூளை கேட்பதில்லை
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஏன்இவ்வளவு தூரம்
விரும்பிய மனசுக்குள் ஏன் இத்தனை பாரம்
ஒருமுறை இறங்கி வந்துவிடு
என் போர்வைக்குள் உன்னை ஒளித்து கொள்வேன்
ஒருமுறை இறங்கி வந்துவிடு
மேகமாய் என் கைக்கொண்டு உன்னை மூடிகொள்வேன்
ஒருமுறை இறங்கி வந்துவிடு
வேகமாய் ஒரு முத்தம் உன் உதடுகளில் சூட்டிக்கொள்வேன்
நட்சித்திர தேவதை நீ நிலவாய் உயிர்ப்பாய்
ஒருமுறை இறங்கி வந்துவிடு
நேசமாய் நீ திருப்பி என் உதடுகளுக்கு உஷ்ணம் தந்து
என்னை சூரியனாய் உயிர்ப்பிப்பாய்
இரவு சூரியனாய் நான் என் போர்வைக்குள்
குளிர் நிலவாய் நீயும் அதற்குள்
நீல வானில் அல்ல நம் அறைக்குள்
நீள வேண்டும் அந்த அழகிய அந்தி காலங்கள்