நிலவிற்கு நான் விடும் தூது

நிலவே வான் நிலவே
வான் வெளியில் வந்துலாவும்
பால் நிலவே சந்திரனே,
வானிற்கு நீ வந்து
ஐயாயிரம் மில்லியன் வருடங்கள்
ஆனபின்னும் உன் வடிவழகில்
யவ்வனம் அன்றுபோல் இன்றும்
வளம் குறையாது இருக் கின்றதே
நீ தேவனல்லவா புரிகின்றது
உன் இளமையின் ரகசியம்:
நினைத்தால் எனக்கு சிரிப்புதான்
வருகிறது அதை நினைத்தால், எதை
என்று நீ கேட்டால் , சொல்வேன்,இங்கு
மண்ணுலகில் மானிடர் நாங்கள்
குழந்தையாய்ப் பிறந்து,வளர்ந்து
ஆளாகி, மூப்பும் எய்தி வனம் குன்றி,
வளம்குன்றி மறைகிறோம்; நீயோ நிலவே
பிறந்தது முதல் இன்றுவரை இளமைக்
குன்றாது விண்ணை உலாவி வருகிறாய் !
சௌந்தர்ய சுந்தரனாய் எமக்கு குளுமை தரும்
தண் நிலவாய் !நவகிரகங்களில் ஒருவனாய் !

நிலவே, சோமனே,சந்திரனே, இந்த
மானிடன் நான் உன்னோடு உறவாட விழைகின்றேன்
நல்லதோர் நண்பனாய் ,அதனால் தேவனே
உன்னை வேண்டி நான் விடுக்கும் தூது இதுவே
அதோ பறக்கும் அந்த வானம்பாடி இந்த தூது
மடலை ஏந்தி வருகிறது பெற்றுக்கொள்வாய் நிலவே,
நான் விடும் தூதும் இதுதான்..................... .

" விண்ணிலே உலாவி இது நாள்வரை காலம் கழித்துவிட்டாய்
தரை இறங்கி மண்ணுலகம் வா நிலவே
உனக்காக உன் நண்பன் நான்
நதியோரம் காத்திருப்பேன்; நீ வந்தவுடன்
நாம் இருவரும்-தேவன் ஒருவன்,மனிதன் ஒருவன்
கை கோர்த்துக்கொண்டு பெரும் நண்பராய்
இந்த மண்ணுலகம் பூராவும் சுற்றி வருவோம்
நிலவே, உனக்கு ஒன்று தெரியுமா ,நீ
தேய் பிறையாய்,வளர்பிறையாய் மாற்றி திரிவது
ஒரு சாபத்தினால் என்றால் , அது நீ விண்ணில் இருக்கும்
வரைதான்;மண்ணுலகில் அந்த சாபம் பலிக்காது ,
அதனால் நீ தரை இறங்கி வந்தாயாகில் ,மாதம்
முழுவதும் முழுநிலவாய், நித்ய பௌர்ணமியாய்
பவனி வரலாம்!நிலவே ......................................"

நிலவே என் அழைப்பை நீ ஏற்றுக் கொள்வாய்
விண்ணை விட்டு மண்ணுலகம் வந்துவிடு
இங்கு என்னை கண்டுகொண்டு நண்பனாய் என்னை
ஏற்றுக் கொள்வாய் அந்த தேவா-மண் நட்புறவில்
நாம் சில காலம் உல்லாசமாய் மண்ணுலகம் முழுதும்
உலாவிவருவோம் உன் நட்பில் என்றும் இளமையில்
இருந்திட எனக்கு ஆசி தருவாய் வாழவைப்பாய்
மீண்டும் நீ நிலஉலகு திரும்பும் முன்னே !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Jun-17, 1:20 pm)
பார்வை : 272

மேலே