பள்ளிப் பாடங்கள்
உலகம் ஒன்றுதான் என உணர்வது ஒன்றாம் வகுப்பில்
நல்வினை, தீவினை என இருவினைகளைக் கற்று நடப்பது இரண்டாம் வகுப்பில்
முக்கோணம் பற்றிய கணித பாடங்கள் மூன்றாம் வகுப்பில்
நால்வர்கள் பற்றிய வரலாற்றுப் பாடங்கள் நான்காம் வகுப்பில்
ஐந்திணை பற்றிய ஆராய்ச்சிகள் ஐந்தாம் வகுப்பில்
வாரத்தில் ஆறு நாட்கள் உழைக்கத் தொடங்கியது ஆறாம் வகுப்பில்
ஏழு அதிசயங்கள் பற்றிய வரலாற்றுப் பாடங்கள் ஏழாம் வகுப்பில்
எட்டுத்தொகை பற்றிய தமிழ் பாடங்கள் எட்டாம் வகுப்பில்
ஒன்பான் சுவை பற்றிய தமிழ் பாடங்கள் ஒன்பதாம் வகுப்பில்
பத்து பேர் இணைந்து படிப்பது பத்தாம் வகுப்பில்
பதினொன்று திணை பற்றிய தமிழ் பாடங்கள் பதினொன்றாம் வகுப்பில்
பன்னிரண்டு உப்பு செய்முறைகளும் பரிசோதனைகளும் பன்னிரெண்டாம் வகுப்பில்