எழுவான் உழுவான்

எழுவான் உழுவான்ன்
எழுவான் உழுவான்ன்


எழுவாய் என் உழவா - நீ
உழுதால் என் உணவே!
உழுதே உயிர்போயினும் -உனக்கு
உழவே உயிரானதே!
பழுதாய் பயிராயினும் -எனக்கு
பதமாய் சோறானதே!
உயிரான பயிர்போனதும் -உழவா
உந்தன் உயிர்போனதே
உன்னால் உயிரானவன்(அரசியல்) -உழவா
உனையே உலையாக்கினான்
உழவா
உன்னை உயிராக்கிட- உனக்கே
ஓருலகம் நீர்செய்க
உலகே உனைப் பார்த்திட
உனக்கென ஓர் படைதான் (மாணவர்) உயிர்த்தெழுக...
உழவா...
பாவம் நீ என்று -அந்த
தெய்வம் அருள் தருக
பார்க்கும் திசைகளெல்லாம் -உந்தன்
பசுமை உயிர் பெறுக
----கல்லரைசெல்வன்

எழுதியவர் : கல்லரைச்செல்வன் (1-Jul-17, 12:03 pm)
சேர்த்தது : கல்லறை செல்வன்
பார்வை : 399

புதிய படைப்புகள்

மேலே