பச்சை நிலம் எங்கே

பச்சை வர்ணத்தை குழைத்து நிலத்தில் தெளித்தான்

நீல வர்ணத்தை குழைத்து வான கூரைகளில் பூசி விட்டான்

நடுவே சூரியனை தொங்க விட்டானதன் சுவாலையின் தணல் தணிக்க

அதனால்தானோ வானத் திலே கார் மேகங்களை காணவில்லை பயிர்

வேரிலே ஈரமில்லை
ஊரிலே சோறில்லை
பாருக்கு கண்நொல்லை
காதுகளோ கேட்பதில்லை
சந்தித்தும் நீதியில்லை
சிந்தித்து பார்க்கையிலே
நிந்தித்து ஒரு பயனுமில்லை
ஆண்வன் செய்யும் லீலை

நதி ஏரி குளம் குட்டைகள் மேல் கோபமோ; தாம் தரும் நீரை தேக்கி வைக்க தெரியவில்லை என்று

எட்டி பழுத்தென்ன இய்யா தவன் வாழ்ந்தென்ன
யாருக்கும் உதவாத இடம் தேடி வானம் பொழிந் தென்ன; வீணாக போய் கடலில் வீழ்ந்தென்ன "பச்சை நிலம் எங்கே?" இங்கே எஞ்சியது புலம்பல்

பச்சை நிலம் பார்க்க வட்டிக்கு கடன்பட்டு
முட்டியில் இரத்தம் கெட்டு
வட்டியே கயிறாகி
கழுத்துக்கு தீம்பாகி
சுடுகாட்டை நிறப்பி

மனைவியை விதவை யாக்கி; பிள்ளை குட்டிகளை அனாதை யாக்கி; பார்க்கும் வாழ்வு ஒரு வாழ்வா

வேர் செத்துப் போனால் சோறு அத்து போனால்
சும்மா விடுமா வயிறு

சோற்றுக்காக நாம் ஏங்கலாம்; ஏழை எளியோர் பசியை போக்க; முடிய வில்லையே என்று சோறு ஏங்கக்கூடாது

பச்சை நிலம் பச்சை கட்டும் நாள் ஒன்று உளதோ; பிச்சை எடுத் துண்ணவும் வழியில்லை

பிச்சைக்காரனுக்கு பிச்சைக் காரன்; பிச்சை யிட்டுக் கொள்வானோ

வறட்சியினை கண்டு மிரட்சியுற்றே; பச்சை நிலம் காண புறட்சியில் இறங்கியும்

மறுமலர்சியை இன்னும் கண்டாரில்லை ; என்பின் இனி வாழ்ந்தென்ன வாழாது மனங்குன்றி; உயிர் நீத்து வீழ்ந்தென்ன என

எண்ணிக்கை கூடுதிங்கே குறைந்த பாடில்லை என குமுறுதே மனம்

எழுதியவர் : Abraham Vailankanni (1-Jul-17, 3:55 pm)
பார்வை : 59

மேலே