காதல் விண்மீன்
இதயத்தின் ஊடுருவலில்
தெரியக்கூடும்
என்
செயல்களின் விளக்கம்
மணக்கண்ணில்
விழக்கூடும்
என்
ஆன்மாவின் வெளிச்சம்
உள்ளுணர்வின் செவிகளில்
ஒலிக்கக்கூடும்
என்
மௌனப் பாடலின்
அதிர்வெண்
உறக்கம் தொலைத்த
இரவு வானத்தில்
சிமிட்டக்கூடும்
என்
காதல் விண்மீன் !
#மதிபாலன்