அப்துல் கலாம் ஐயாவின் மரணம்
[] அப்துல் கலாம் ஐயாவின் மரணம் ...
----------------------------------------------------------------------
ஏழு எழுத்தில் பெயர்
எட்டு திசையில் புகழ்
கற்று கொடுத்தாய் கனவை
காலம் சுமக்கும் உன் நினைவை !
இந்தியாவை கவனித்த நீ
இதயத்தையும் கவனித்திருக்கலாம்
இளைஞனோடு இளைஞனாய்
இன்னும் கொஞ்சம் பயணித்திருக்கலாம் !
இரானுவம் பலமானது - உன்னால்
இராக்கெட்டுகள் பலவானது
இயலாது என்ற நோய்
இளைஞனுக்கு குணமானது
இந்தியா வளமானது !
அணுகுண்டு சோதனையை
அகிலத்திற்கே மறைத்து வைத்தாய்
அகலத்திற்கு மறைத்ததை - ஏனோ
அடிமனதில் வெடிக்க வைத்தாய் !
வீணை கலைஞனும் நீ
விண்வெளி இளைஞனும் நீ
கடைசி குடிமகனும் கண்ணீர் சிந்திய
முதல் குடிமகன் நீ !
தனியாய் வாழ்ந்தாய் - ஆனால்
தனிமையில் வாழவில்லை
விண்ணையும் மண்ணையும் யாரும்
உன்போல் ஆளவில்லை !
பதவிகள் உன்னை தேடி வந்தது
பாரதம் ஆயிரம் விருது தந்தது !
இத்தனை கண்டும் உன் மனம்
இளைஞனை தேடியே சென்றது !
அவனுக்காக துடித்த இதயம்
அவன்முன் பேசியே நின்றது ..!
- யாழ்..