கானல் நினைப்புகள்

[] கானல் நினைப்புகள் ...
---------------------------------------------------------------------


அவன் பார்க்கும் போது அவள்
பார்த்தாலும் பாரக்காவிட்டாலும்
அவன் பழக நினைக்கையில் அவள்
பழகினாலும் பழகாவிட்டாலும்

அவன் பேச்சு கொடுக்கையில் அவள்
பேசினாலும் பேசாவிட்டாலும்
அவன் நகைச்சுவைக்கு அவள்
சிரித்தாலும் சிரிக்காவிட்டாலும்

அவனை அவள்
மதித்தாலும் மதிக்காவிட்டாலும்
அவள் உடுத்தும் உடை
சுடியானாலும் மிடியானாலும்
உடையின் நிறம்
மஞ்சலானாலும் பச்சையானாலும்

அவனை அவள்
அவன் என்றாலும் அவர் என்றாலும்
அண்ணன் என்றே அழைத்தாலும்

அவன் அழைத்த நொடியில் அவள்
திரும்பினாலும் திரும்பாவிட்டாலும்
அவன் பேசிய பேச்சுக்கு அவள்
மறு பேச்சு பேசினாலும்
மறுத்து பேசினாலும்
மௌனமாய் இருந்தாலும்

அவன் நடக்கையில் அவள்
எதேச்சையாக எதிரில் வந்தாலும்
வருபவளின் தலை
நிமிர்தபடி இருந்தாலும்
குனிந்தபடி இருந்தாலும்
என்று -

அவள் எது செய்தாலும்
அது காதலின் வெளிபாடு தான்
அவளை காதலிக்கும்
ஒருதலை காதலன் அவனுக்கு ..!


- யாழ் ..

எழுதியவர் : யாழ் கண்ணன் (6-Jul-17, 11:00 am)
பார்வை : 119

மேலே