அழிதலில்
#இறைவனிடம் #சில
#கேள்விகள்:
-----------=-----------
#நான்:
இறைவா மனிதனுக்கு மட்டும் ஆறறிவை ஏன் கொடுத்தாய்?
#இறைவன்:
ஆதானால் தானே இன்று நீ என்னையே கேள்விகள் கேட்கின்றாய்.
#நான்:
கேள்விகள் கேட்பது தவறா?
#இறைவன்:
அது உன் உரிமை.
#நான்:
என் உரிமைகள் எது?
அதை நான் எவறிடம் பெறவேண்டும்?
#இறைவன்:
அனைவர்க்கும் இங்கே சம உரிமை என் படைப்பில்.
#நான்:
அனைவற்கும் இங்கே சம
உரிமை எனில்,
1)ஆளும் வர்க்கம்/அடிமை
வர்க்கம்
2)ஏழை /பணக்காரன்
3)முதலாளி/தொழிலாளி..,
இந்தப் பிரிவுகளுக்கு எல்லாம்
யார் காரனம்?
#இறைவன்:
இது கொஞ்சம் சிக்கலான கேள்வி இருந்தாலும் இதை தெளிவு படுத்தியே ஆக வேண்டும்.
என் பணி படைத்தலோடு,
வாழும் காலத்தை தீர்மானித்தல் மட்டும் என் வேளையாக
ஆனால் மனிதன் என்னை பின்னுக்கு தள்ளி விட்டான் படைப்பதில்.
என் படைப்பில் இல்லாத ஒன்று அவன் படைப்பில்.
அவன் படைத்தது அவனையே
ஆட்டிப் படைக்கின்றது
இது ஏனோ அவனுக்கு புரியவில்லை.
#நான்:
இது தெரிந்தும் ஏன் மௌனம்?
#இறைவன்:
மௌனமாக நான் இருந்தால் படைத்தல் நின்று விடும் என்பதை மறந்து விடாதே,
அழிவுப் பாதையில் அவன் பயனிக்கின்றான்,
நான் மௌனித்திருந்தால்
எப்படி?
கேட்டுவிட்டு மறைந்து போனான்.
படைப்பின் எண்னிக்கை கேட்க நினைத்தேன் தவறிவிட்டது,
அழிவின் கணக்கை ஆய்ந்து சொல்ல யாரும் உண்டோ என்றுத் தேடினேன்
அழித்தவனும் அழிந்து விட்டான்.
எனக்கு இன்று புரிந்தது அழித்தலை நம் கைய்யில்
ஒப்படைத்து விட்டான் என்று
அவன் நம்பிக்கை வீன் போகவில்லை
வெகு விரைவில் முதலிடம் பெருவோம்!
"#அழிதலில்"
#Sof_sekar