மாசற்ற காதல்
என்னவளே நீ
காற்றில் மாசு காணலாம்
நீரில் மாசு காணலாம்
ஒலியில் மாசு காணலாம்
ஒளியிலும் மாசு காணலாம்
வளி மண்டலத்தில் மாசு காணலாம்
விளை நிலத்திலும் மாசு காணலாம்
மனித உறவுகளில் மாசு காணலாம்
நான் உன்மேல் கொண்டிருக்கும்
காதலில் உன்னால் மாசு காண இயலாது
மாசற்ற என் காதலை
ஏற்றுக்கொள் என் அன்பே...