இந்த புள்ள இம்புட்டு அழகா இருக்கு

அடி ! ஆத்தி இது என்னடா !
இந்த புள்ள இம்புட்டு அழகா
இருக்கு !
இத எப்படி டா புடிச்ச !
என்று என் தாய் சொல்வதைக்கேட்டு
சற்று நானும் வெட்கத்தில் நெளிந்தேன் !
என் தலையில் நறுக்கென்று என் தாய்
கொட்டிய பின்பே என் சுயம் உணர்ந்தேன் !