உலக முத்த தினம் கவிஞர் இரா இரவி

உலக முத்த தினம் ! கவிஞர் இரா .இரவி !

கற்காலம் தொடங்கி கணினிக்
காலம் வரை தொடர்வது
முத்தம் !

இதழ்கள் எழுதும்
இனிய கவிதை
முத்தம் !

காதலர்களின்
முதல்படி
முத்தம் !

உதடுகள் வழி
ஊட்டச்சத்து
முத்தம் !

யானைப்பசிக்கு
சோளப்பொரி
முத்தம் !

இதழ்கள் வழி
அமுதம் பரிமாற்றம்
முத்தம் !

உச்சரிக்கும் போதே
உதடுகள் உரசும்
முத்தம் !

தமிழ்த் திரைப்படங்களில்
தடை செய்யப்பட்டது
முத்தம் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (6-Jul-17, 8:13 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 189

மேலே