உண்மையின் வழி
![](https://eluthu.com/images/loading.gif)
வாழ்க்கை என்பது சுலபமானது சிறப்பென்னும் கூற்று கலவாது உத்தமமாக வாழ்ந்தவரை...
சிறப்பு என்னும் கூற்றைக் கலந்த மனிதன், அடுத்தவரை விட திறமை, பலம், கல்வி, ஞானம், செல்வம் என்பனவற்றில் எவ்வளவு அதிகம் பெற்றிருக்கிறானென்பதைக் கொண்டு அச்சிறப்பைத் தீர்மானிக்கிறான்,
சிறப்பின் சிறப்பறியாத மூடனாய்...
அடுத்தவரை வெற்றி கொண்டு அவரைவிட தான் அதிக ஞானம், பலம், கல்வி, செல்வம் பெற்றவனென நிரூபிப்பதே இங்கு பலரின் ஓட்டமாக உள்ளது ஆசையாய்...
போட்டி, பொறாமை கலந்த மனிதர்களுள் ஒற்றுமையைக் காண்பதென்பது என்றும் இயலாத கனவு...
ஏன் இதை திரும்பத் திரும்பச் சொல்கிறேனென்றால் இந்த உலகில் நாட்டுக்கு நாடு, வீட்டுக்கு வீடு காணப்படும் உண்மை நிலை இதுவே...
பக்கத்துவீட்டுப் பையனைவிட தனது மகன் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறானே என்பதே பல பெற்றோரின் கவலை...
அக்கவலையே நோயாகி தனது மகனை இன்னும் அதிகம் படிக்க வேண்டுமென துன்பப்படுத்துகிறார்கள் பக்கத்துவீட்டு பையனை விட அதிக மதிப்பெண்களைப் பெறுமாறு...
போட்டி, பொறாமையாகிய விஷம் இப்படி பல சூழல்களில் மனங்களில் விதைக்கப்படுகிறது அன்பை, ஒற்றுமையை வேரறுக்கும் விதைகளாக...