பேரழகே

செல்லக்குரலாலே என்னை கொல்லும் பேரழகே
உண்மையில் உந்தன் பெயரும் அழகே

பூ விழியால் புது மொழி பேசினாய்
உதட்டு சுழியால் என்னுள் ஒளி வீசினாய்
ஒரு நொடியில் புது விடியல் கண்டேன்
ஆதலால் உன்மேலே காதல் கொண்டேன் ..

நேர்த்தியான உடல் அளவுடன்
பூர்த்தியான உடை அழகும்
என்னை வெல்லுதே
எப்பொழுதும் கற்பனைகள் வந்து
நீதான் என்னவள் என்று சொல்லுதே ..


முத்துகுவியல் புன்னகையால்
பித்து பிடிக்க செய்கின்றாய்
தத்து எடுத்து என்னை
மொத்தமாக கொடு உன்னை ...


by
நாஞ்சில் ஆலன்

எழுதியவர் : (8-Jul-17, 8:54 am)
சேர்த்தது : nanjilallen
பார்வை : 174

மேலே