வாயு அரசியல்

வாயு அரசியல்

அரசியல் வியாபாராமாய்,
பூமியின் எல்லை தொட்டு,
காற்றை புறம் தள்ளி ,
என் உழவனின் மூச்சை அடக்குகிறது
நம் அரசு!

மூச்சை இறுக்கி,
இரு கால்களை முன்னோக்கி நகர்த்த, பாதங்களை நெருப்பால் சுடுகிறது
நம் அரசு!

நெருப்பின் உஷ்ணம்,
உழவனின் கால் அறியா,
கை கொண்டு போர்க்கொடி தூக்க,
ஏவலின் காவலால் புறம்தள்ளுகிறது
நம் அரசு!

எதிர் எதிர் கட்சிகளின்
கள்ள மௌனத்தினால் ,
கயவர்க் கூட்டம் ,
நம் விளைநிலங்களை
மலடாக்கத் துடிக்கிறது.

ஏய் இளைஞனே ,
உழவனின் கரம்பற்றி,
கயவர்களை களம் கன்டு
கழனி மீட்போம்!

உங்கள்
தௌபிஃக்

எழுதியவர் : தௌபிஃக் (9-Jul-17, 6:43 pm)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
Tanglish : vaayu arasiyal
பார்வை : 138

மேலே