மழையும் மின்னலும் மாலைப்பொழுதும்

மண்ணில் கொட்டித் தீர்க்கும் மழை துளிகள் !
மெல்லிய முணங்களுடன் இடிக்கும் இடியோசை!
கருமேகங்கள் நடனமாடும் மாலைப் பொழுது!
இயற்கை தன் பெண்மையை மின்னலாய் காட்டும் நேரமிது !
எத்தனை வளைவுகள் எத்தனை நெளிவுகள் !!!
கண் சிமிட்டாமல் உன் அழகை ரசிக்க ஆசைதான்...
நான் மறைந்து ரசிப்பது தெரிந்து விட்டதோ?
வெட்கத்துடன் பட்டென்று மறைகிறாள்!
மருதரிசனம் கிடைக்கும் வரை காத்திருப்பேன்
இத்தருணம் வேண்டி
உன் அழகை ரசிக்க!!!!!

எழுதியவர் : (10-Jul-17, 12:03 am)
சேர்த்தது : செல்லம்மா பாரதி
பார்வை : 246

மேலே