சோலை பதிப்பகம் தந்த தலைப்பு தண்ணீர் கவிஞர் இரா இரவி

சோலை பதிப்பகம் தந்த தலைப்பு !
தண்ணீர் ! கவிஞர் இரா .இரவி !

மனிதர்கள் மட்டுமல்ல
உலக உயிர்கள் உயிர் வாழ
தண்ணீர் !

மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல் சுற்றுலா
தண்ணீர் !

உணவு உருவாகவும்
உணவாகவும்
தண்ணீர் !

நாடுகள் அமைதியாக
மாநிலங்கள் சண்டையோடு
தண்ணீர் பகிர்வு !

நிலத்தில் குறைந்தால் பஞ்சம்
நிறைந்தால் வெள்ளம்
தண்ணீர் !


பிடிக்கவிடுவதில்லை
பக்கத்துத் தெருவினரை
தண்ணீர் !


கூடவோ குறையவோ இல்லை
உலகில் உள்ள மூன்று பங்கு
தண்ணீ ர் !

பயிர் வளரவும்
உயிர் வாழ்வும்
தண்ணீர் !

அன்று பொதுவுடைமை
இன்றி தனியுடைமை
தண்ணீர் !

தாகம் தணிக்கவும்
தரிசு விளையவும்
தண்ணீர் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (10-Jul-17, 5:17 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 106

மேலே