யுகங்கள் உருவாகும் கதை
உலகில் தீமைகள் மலிந்தன
தீயோர் எண்ணிலடங்காப் போயினர்
எங்கும் தீயோர் போர்கோலத்தில்
செய்வதறியாது நின்றனர் அப்பாவிகள்
தீமையின் பளு தாங்காது பூமித்தாய்
தவிக்கின்றாள் .............................
சீற்றத்தால் சிவன் ,கண் திறக்க
கோர தாண்டவம் புரிகின்றான்
காசினி நடுங்க அழிந்து ஒடுங்க,
எங்கும் மயான அமைதி,
புது யுகம் தொடங்க காத்திருக்கிறான்
திருமால், ,புது ஸ்ரிஷ்டிகளுக்காய் பிரமனும்,
யுகங்கள் இப்படித்தான் உருவாக்குகின்றன !