லேசான காற்று

லேசான காற்று
=================

புன்னகையை பிடித்து
மின்னலில் கோர்த்து
இடி இடித்து இரவில்
குளிர்காய்கிறேன்...!!!

சிறு பூவில் விழுந்த
சிறு தேன்துளிப்போல்
உன் பேச்சில் விழுந்து
மெல்ல மெல்ல பருகுகிறேன்...!!!

கண் சிமிட்டும்
விண்மீனை சிறைபிடிக்கிறேன்...!!!
வழி தவறி அலையும் நிலவுக்கு
விழியசைவில் திசைகாட்டுகிறேன்...!!!

லேசான காற்றிலே
மோதி மோதி விழுகிறேன்...!!!
பறையே சுண்டு விரலாலே
சும்மா சும்மா சுண்டிவிடுறேன்...!!!

முன்னாலே வந்து நிற்கையிலே
சோகத்தை ஒளிக்கிறேன்...!!!
இமையை தூசி தட்டி
புன்னகை தெறிக்கிறேன்...!!!

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (11-Jul-17, 8:00 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : lesaana kaatru
பார்வை : 317

மேலே