நிலவோடு நிலவு அழகாகிறது
மொட்டைமாடியில்
உலவிக்கொண்டே நிலவை
ரசித்துக்கொண்டிருப்பது
உனக்கு பிடித்தமான ஒன்று !
நிலவின் வெளிச்சத்தில்
உன்னை பார்த்துக்கொண்டே
கவிதை எழுதுவது
எனக்கு பிடித்தமான ஒன்று !
அது சரி ! அப்படி
என்னதான் ஒருவருக்கொருவர்
ரசித்துக்கொள்வீர்கள் !
பேசிக்கொள்வீர்கள் !
நிலவோடு நிலவு அழகாகிறது
உன் நினைவோடு
என் கவிதை அழகாகிறது !