காருண்யம்

===========
உணவுண்ண உட்கார்ந்த நேரம்
பெட்டைக்கோழியின் அபாயகுரல் கேட்டு
எட்டிப்பார்த்த முற்றத்தில்
கோழிக்குஞ்சை கொத்துவதற்கு வட்டமிட்ட
காகத்தை துரத்திவிட்டு
குஞ்சுகளை பாதுகாத்த திருப்தியுடன்
மறுபடியும் பந்தியில் அமர்கிறேன்..
இப்போது தங்குதடையின்றி
நொண்டியடிக்காமல் நுழைகிறது
வாய்க்குள் கோழிக்கால்!
*மெய்யன் நடராஜ்