மௌன குளம்

இந்த மௌனத்தின்
நறுமண ஊற்று
நீ தரும் கூழாங்கற்களாக
பாதுகாத்து வருகிறேன்
மழையோ வெயிலோ
உன் மேகத்தின் பேரன்பை
முத்தமிடுகிறேன்
உன் புன்னகை மலர்களை
மரத்தின் வேரென
இறுக்க பற்றுகிறேன்
போதுமென சொல்லவில்லை
ஆனால்
இந்த மௌன குளத்தில்
ஒரு கல்லாவது எறி
- கோபி சேகுவேரா