முகநூல்
........முகநூல்..........
முகநூலால் அலையெனும் பசுமையில் மூழ்கி முத்தெடுக்க விளையும் மனித மனங்கள்
முழு நேரத்தையும் முகமூடிப் புத்தகத்தில் தொலைத்தே முட்டி மோதுகின்றன வாழ்க்கையோடு....!
குப்பைத் தொட்டியை நிரப்ப வேண்டியவை
குவிந்து போய்க் கிடக்கின்றன பதிவுகளாய்
உள்ளே மறைந்திருக்கும் அழுக்குகளை வாந்தியெடுத்து செல்கின்றனர் விமர்சனங்களாய்.....!
கருத்து என்ற பெயரில் கலப்படம் செய்பவன் கைதட்டல்களைப் பெறுகின்றான்
உண்மையின் வடிவங்களை உணரச் செய்பவன் விசித்திர மனிதன் எனும் பட்டத்திற்கும் உரிமையாகிறான்....!
நவீன தொழிநுட்பத்தின் வளர்ச்சி பலரின் கனவுகளை நனவாக்கிடவும் பாதை அமைத்துக் கொடுத்துள்ளது
கடல் கடந்த நல் உறவுகளை பெற்றிட
பாலமாயும் அமைந்துள்ளது....!
தளத்தினை முறையாய்ப் பயன்படுத்தி
வீழ்ச்சிப் பாதையினைத் தவிர்த்தே வளர்ச்சி நோக்கிப் பயணித்தால்
என்றும் இதுவே எம் நட்புலகு....!