ஆணும் அழகு நிலாவும்
வண்ணமோ பொன்மஞ்சள்
வடிவமோ வட்டமுகம்
எண்ணத்திலோ குளிர்சசி
வானத்திலோ நட்சத்திர ஊர்வலம்
கண் இரண்டும்
திறந்து விடில் காணக்கோடி
இன்பம்.
தண்ணிலவே
உன்னையா ஆண் என்றார்
தவித்து விட்டேன் ஒரு கனமே,
கண் மூடிப் படுத்தாலும்
கனவில்கூட வந்தாலும்
அதிலும் உன் உருவம்
கட்டழகு மங்கையடி!
வானத்து தாரகையே
வண்ண வடிவழகி
ஆணாக நீ இருந்தால்
ஐயகோ, ஐயகோ!
அவனயிலே ஆண்களுக்கு
என்ன இது சிந்தனை?
ஆததிரம் தான் வந்தாலும்
என்னருகே நீ இருந்திடு
எப்போதும் பெண்ணாக!