கனவு

உறங்க போகும் முன்
உதிர்த்த ஒரு வார்த்தை
வளரும் ஒரு கவியாய்
சிலர்தான் அதை ரசிப்பார்

பலரின் மனம் கவர
ஏற்ற கவி எழுத
கால நேரம் எதுவென்று
எப்படி யோசித்தும்...

இதுவரை முடிவில்லை
ஏனோ தெரியவில்லை
கவிதை விளக்கம் சொல்லும்
கவிதை விளக்கி சொல்லும்

விரும்பிடும் கவிதை தர
எந்த கருப்பொருள் துணையின்றி
இயலுமா ஒரு கவிதை
இதுவே என் முன்னுரை

இப்படி யோசித்தால்
ரசிக்க யார் இருப்பார்
கவிதை வாசிக்கும்
ஆசையைதான் துறப்பார்
என்னையும் தூற்றி நிற்பார்

எதற்கிந்த விஷப்பரீட்சை
என்று நினைத்த நொடி
தூக்கத்தில் தொலைந்துவிட்டேன்
எழுதிய பக்கத்துடன்
இனியும் சொல்வது இல்லை
உறங்க போகும் முன்

எழுதியவர் : ருத்ரன் (18-Jul-17, 8:40 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kanavu
பார்வை : 229

மேலே