உயிரின் இசை நீயா

அடர்காடு பனியிரவு
ஒளிர்பௌர்ணமி நீயா

மலைமுகடு சிறுகுடிசை
நழுவும் உடை நீயா

மென்சாரல் குளிர்காற்று
அவிழ்மல்லிகை நீயா

தனித்தீவு அலைநடனம்
உயிரின் இசை நீயா?

#மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (19-Jul-17, 9:43 pm)
சேர்த்தது : மதிபாலன்
பார்வை : 130

மேலே